உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பராசக்தி' கதை இதுதான்

'பராசக்தி' கதை இதுதான்


சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்துள்ள 'பராசக்தி' படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். 1960களில் மாணவர்கள் நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது.

படத்தின் கதை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கதை பற்றி இயக்குனர் சுதா கொங்கரா கூறியிருப்பதாவது: இது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் உருவாகும் கதைதான். 1960கள் எப்படி இருந்தது என்பதை இந்த தலைமுறைக்கும் காட்டும் படம்தான். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடந்த மிகப்பெரிய போராட்டம் அது. பல மறைக்கப்பட்ட உண்மைகளையும் படம் பேசுகிறது.

சிவகார்த்திகேயனும், அதர்வாவும் அண்ணன் தம்பிகள், மதுரையை சேர்ந்தவர்கள். சிவகார்த்திகேயன் அரசு வேலையில் இருக்கிறார். அதர்வா என்ஜினீயருக்கு படிக்கிறார். இருவரும் பாசத்தோடு இருந்தாலும் இரு வேறு கொள்கைகளை கொண்டவர்கள். அவர்களுக்கு கருத்து மோதல்கள் இருக்கிறது. சிவா அமைச்சர் மகள் ஸ்ரீலீலாவை காதலிப்பார். சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் இந்த 3 பேர் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதுதான் படம்.

ஏராளமான ஆய்வுகள் செய்து, கடந்த 5 ஆண்டுகளாக இதற்காக பணியாற்றி படம் உருவாகி உள்ளது. ரவிமோகன் வில்லனாக நடிக்கிறார். அவருக்கும், சிவாவுக்கும் ரியலான சண்டை காட்சிகள் இருக்கிறது. ஸ்ரீலீலா டாக்டருக்கான தேர்வு எழுதிக்கொண்டே இந்தப் படத்தில் நடித்தார். என்கிறார் சுதா கொங்கரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (3)

ram, mayiladuthurai
2025-12-24 16:37:04

படம் ஊத்திக்கிட்டு போனால் நல்லது, இந்த படத்தின் டைரக்டர் ஒரு பெரிய திருட்டு திமுக அண்ட் திக ஆதரவாளர்


மாயவரம் சேகர்
2025-12-19 12:26:25

இந்த இயக்குநர் சுதா கொங்குரா, திமுக சாம்பார் உண்மைகளை மாற்றி திரிப்பதில் தவறாக காட்டுவதில் வல்லவர்.நிச்சயம் சர்ச்சைகளை கிளப்பி விளம்பரம் தேடுவார். 1960 களில் இந்தி எதிர்ப்பு போராட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தூண்டி விட்டது திமுக கட்சி . ஈவெரா இந்தியை ஆதரித்தார் .இவையெல்லாவற்றையும் சாமர்த்தியமாக திணிக்க கூடியவர் சுதா கெங்குரா. ஏதோ நாடு முழுவதும் இந்தியை எதிர்த்ததாக பொய் சொல்லி இருப்பார்.தேவையில்லாத இந்து மத எதிர்ப்பு சமஸ்கிருதம் பற்றி பொய்யை திணிக்கும் விஷயம் இருக்கும்


angbu ganesh, chennai
2025-12-19 16:19:54

1960ல இருந்து இவனுங்க ஹிந்தி ஒழிப்புன்னு போராட்டம் பண்ணி ஹிந்திகாரனோட தோழமை கட்சின்னு ஒண்ணா கூடி இந்தியாவை அழிச்சிட்டு இன்னி வரைக்கும் ஹிந்திய ஒழிக்கறானுங்க வோட்டு போடற நாம்தான் இவனுங்க ட்ராமாவை தெரிஞ்சு இவனுங்க ஒழிக்கணும்