உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னை சர்வதேச திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு: 'பறந்து போ' சிறந்த படம்

சென்னை சர்வதேச திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு: 'பறந்து போ' சிறந்த படம்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களின் போட்டி பிரிவில் 18 படங்கள் போட்டியிட்டன. தற்போது நடுவர் குழு விருது பட்டியலை அறிவித்து. நேற்று விருது பெற்றவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.

இதில் சிறந்த படமாக ராம் இயக்கிய 'பறந்து போ' விருது பெற்றது. இரண்டாவது சிறந்த படமாக 'டூரிஸ்ட் பேமிலி' தேர்வானது. சிறந்த படத்திற்கான நடுவர் குழு விருது 'மெட்ராஸ் மேட்னி' படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகராக டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடித்த சசிகுமாரும், நடிகையாக 'காதல் என்பது பொதுவுடமை' படத்தில் நடித்த லிஜோ மோல் ஜோசுக்கு கொடுக்கப்பட்டது.

'அலங்கு' படத்தின் பாண்டிகுமார் சிறந்த ஒளிப்பதிவாளராகவும், 'மாயக்கூத்து' படத்தின் நாகூரான் ராமச்சந்திரன் சிறந்த எடிட்டராகவும், இதே படத்தில் பணியாற்றிய அழகியகூத்தன் சிறந்த ஒலிப்பதிவாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !