எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் வருகிற ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யுடன் பூஜாஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது.
ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படத்திற்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் அனைத்து ஏரியா வியாபாரமும் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது வெளிநாடுகளில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை இப்படம் 4 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த முன்பதிவானது நல்லதொரு தொடக்கமாக இருப்பதால் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க இன்னும் பெரிய அளவில் டிக்கெட் புக்கிங் நடைபெறும் என்றும் படக்குழு எதிர்பார்க்கிறது.