உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் சினிமாவில் வெற்றி குறைய நடிகர்களின் தலையீடு தான் காரணம் : திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமாவில் வெற்றி குறைய நடிகர்களின் தலையீடு தான் காரணம் : திருப்பூர் சுப்ரமணியம்

பிரபல வினியோகஸ்தர், மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் மனதில் பட்டதை, யாருக்கும் பயப்படாமல் பேசுபவர். சென்னையில் நடந்த சிறை பட விழாவில் அவர் பேசியது, ''ஒரு படத்தின் வெற்றி என்பது இயக்குனர் கையில் இருக்கிறது. ஹீரோவை புகழ்வதை விட, இயக்குனரை பற்றி பேசினால் அது வெற்றி படம்.

16 வயதினிலே படத்தில் பாரதிராஜாவை தான் பேசினாங்க, ரஜினி, கமல், ஸ்ரீதேவி பற்றி பேசலை. சுவர் இல்லாத சித்திரங்கள், மவுன கீதங்கள் சமயத்தில் பாக்யராஜ் பற்றி பேசினாங்க. புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரனின் ஆர்.கே.செல்வமணி பற்றியும் பேசினாங்க. அந்த படங்கள் பெரிய வெற்றி. இப்படி டைரக்டர் பேசப்பட்டு, அவர்கள் சொல்படி நடிகர்கள் கேட்டால் அந்த படம் பெரிய ஹிட் ஆகும்.

இப்போது தமிழில் வெற்றி படங்கள் குறைவாக இருக்க நடிகர்களின் தலையீடுதான் காரணம். அவங்க தலையீடாமல் இருந்தால் இன்னும் நிறைய வெற்றி படங்கள் உருவாகி இருக்கும். இயக்குனர் மனதில் நினைப்பதை படத்தில் சொல்ல முடிவதில்லை. ஒரு படம் ஆரம்பிக்கும்போதே அதை தனது குழந்தை மாதிரி வளர்க்கிறார் இயக்குனர். அதை கை, கால் பிய்த்தால் என்ன ஆகும். இயக்குனர் போக்கில் விட்டால் சினிமா நல்லா இருக்கும்.

அந்த காலத்தில் 100 படங்கள் வந்தால் 80 படங்கள் வெற்றி பெறும். ஹீரோ தலையீட்டுக்குபின் அந்த வெற்றி விகிதம் குறைந்தது. சிறை படத்தில் எல்லாரும் அந்தந்த கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள். இதில் விக்ரம் பிரபு ஹீரோ. அற்புதமாக நடித்து இருப்பதாக சொல்கிறார்கள். அவர் அப்பா பிரபு கூட படம் நல்லா இருக்குது. நீங்க பாருங்க என எனக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். 2025ல் சினிமா மோசமாக இருக்கிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மோசமான வசூல் வந்தது. அடுத்த ஆண்டாவது சினிமா நன்றாக இருக்கட்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (3)

Ravi Shankar, Chennai
2025-12-24 09:00:28

எல்லோரும் பணத்தின் பின்னாடி தான் ஓடுறாங்க. இவளோ பேசுற இவர், எத்துணை சின்ன பட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தியேட்டரில் வெளியீடு செய்கிறார்கள். பெரிய ஸ்டார் படம், சின்ன ஸ்டார் படம்னு பிரித்ததே, தியேட்டர் ஆளுங்கதான்.


KayD, Mississauga
2025-12-23 18:11:49

ஆண்டு வருஷம் வருஷம் தான் மாறும்.. நல்ல படங்கள் வர ஹீரோ முக்கியம் இல்லை ஒரு டைரக்டர் கையில் மட்டும் தான் இருக்கு.. அதான் அவர் பெயர் captain of the ship" என்று சொல்றது .. story telling ஒரு கலை .. அதுக்கு சப்போர்ட் பண்ற இசை நடனம் மற்றும் பல items. வருஷம் வரும் போகும் வரும்.. நல்ல படங்கள் வர வருஷம் தேவை இல்லை . இயக்குனரிடம் தன்னை ஒப்படைக்கும் கலைஞன் மட்டும் தான் தேவை..


Krish, Salem
2025-12-23 16:51:41

100% correct