உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகன் படப்பிடிப்பை பார்க்க வந்த தந்தை மம்முட்டி

மகன் படப்பிடிப்பை பார்க்க வந்த தந்தை மம்முட்டி

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் பிசியான நடிகராக இருக்கிறார். தொடர்ந்து அவர் வெற்றி படங்களையும் கொடுத்து வருகிறார். மகனின் பட தயாரிப்பு, நடிப்பு இது எதிலும் மம்முட்டி தலையிடுவதில்லை. இந்த நிலையில் அவர் துல்கர் சல்மான் நடித்து வரும் “ஐ யம் கேம்” படப்பிடிப்பு தளத்திற்கு மம்முட்டி நேரடியாக சென்று பார்வையிட்டார்.

இயக்குநர் நஹாஸ் ஹிதாயத், சண்டை இயக்குனர்கள் அன்பறிவ், நடிகர்கள் மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து மம்முட்டி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

மம்முட்டி வருகை தந்தபோது படப்பிடிப்பு தளத்தில் துல்கர் சல்மான் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !