உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது

கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது. 'கூரன்' என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அது பற்றி எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது, நான் திரை உலகில் 45 ஆண்டுகளாகத் தயாரிப்பாளர், இயக்குநர் என்று இயங்கி வருகிறேன். இப்போது நடிகராகவும் இருக்கிறேன். சினிமாவில் நான் ஓய்வெடுக்க நினைத்தாலும் அது முடிவதில்லை. சினிமா ஒரு காற்று போன்றது. எப்போதும் அதை நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் நடித்த திரைப்படங்களில் 'கூரன்' என்ற படத்தில் நடித்தது, அதிலும் ஒரு நாயுடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். அது ஒரு நாய்க்கும் மனிதருக்குமான பாசம் சம்பந்தப்பட்ட கதை. 'கூரன்' படத்தில் நடித்ததற்காக எனக்கு சிறந்த நடிகர் என்ற ஒரு விருது கிடைத்துள்ளது. பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா மற்றும் பீப்பிள் பார் அனிமல்ஸ் அமைப்பினர் இணைந்து இந்த விருதை எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.

சினிமாவில் அன்பைப் பற்றிச் சொல்லப்படுவதற்காக 'சினிகைண்ட்' என்கிற அந்த விருது வழங்கப்படுகிறது. அந்த விருதைப் பெற்றுக் கொள்ளும்படி எனக்கு அழைப்பு வந்தது. கோல்கட்டாவில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் எனக்கு விருதை வழங்கினார்கள். நான் எனது மனைவியோடும் மகிழ்ச்சியோடும் அந்த விழாவில் கலந்து கொண்டு விருதினைப் பெற்றுக் கொண்டேன். சினிமாவில் நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடும் உழைப்பை வழங்கினால் அது நமக்குப் பெருமையையும் அங்கீகாரத்தையும் தேடித் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று நான் சொல்வேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !