‛ரெட்ட தல' படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் புதிய நடிகை
ADDED : 10 minutes ago
சினிமாவில் அவ்வப்போது புதிய நடிகைகள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். பிறமொழியை சேர்ந்தவர்களும் சரி, மாடலிங் துறையில் இருந்து வந்தவர்களும் சரி சினிமாவில் ஜெயித்த நாயகிகள் உள்ளனர்.
தற்போது தீவ்ரா ஹரன் என்கிற பிரபல தமிழ் மாடல் அழகி, அருண் விஜய் நடித்துள்ள ‛ரெட்ட தல' படத்தில் அறிமுகமாகிறார். மான் கராத்தே, கெத்து ஆகிய படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இப்படத்தை இயக்கி உள்ளார். ஆக் ஷன் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், சித்தி இட்னானி ஆகியோர் நடித்துள்ள நிலையில் மூன்றாவது நாயகியாக தீவ்ரா நடித்துள்ளார். நாளை(டிச., 25) இப்படம் வெளியாகிறது. இப்படம் வெளியான பின் இவரது நடிப்பு பேசப்படுமாம். தொடர்ந்து தமிழில் நல்ல கதைகளில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்கிறார் தீவ்ரா.