நடிகைகள் ஆடைகள் குறித்து 'அநாகரீக வார்த்தைகள்' : மன்னிப்பு கேட்ட சிவாஜி
தெலுங்கு நடிகரான சிவாஜி சமீபத்தில் நடைபெற்ற அவர் நடித்த 'தண்டோரா' தெலுங்குப் படத்தின் விழாவில் பேசும் போது தெலுங்கு சினிமாவில் கதாநாயகிகள் அணியும் ஆடைகள் பற்றிப் பேசினார். அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தெலுங்கு அநாகரீக வார்தைகள் சிலவற்றை அவர் பேசியது குறித்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தெலுங்கு சினிமா பிரபலங்கள் சிலரும் அவரது பேச்சு குறித்து எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் தன்னுடைய தவறான வார்த்தைகள் பயன்படுத்திய பேச்சுக்கு சிவாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், ‛‛யாரையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. பெண்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டிருந்தால் அதற்காக நான் மனதார மன்னிப்பு கேட்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
அவர் பேசிய வீடியோவை மட்டும் சுமார் 4 லட்சம் பேர் வரை ஒரே நாளில் பார்த்துள்ளனர். அவரது சமூக வலைத்தளப் பதிவில் வெளியான அந்த வீடியோவிலும் ரசிகர்கள் அவர்களது எதிர்ப்புகளை இன்னமும் பதிவு செய்து வருகின்றனர்.