உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி

'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி


தமிழில் 'திமிரு, மரியான்' மற்றும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ரஜினியுடன் இணைந்து நடித்த 'ஜெயிலர்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் மலையாள நடிகர் விநாயகன். சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான 'களம்காவல்' படத்தில் மம்முட்டி வில்லனாகவும் இவர் கதாநாயகனாகவும் நடித்து ஆச்சரியப்படுத்தி இருந்தார். இன்னொரு பக்கம் 'ஜெயிலர் 2' படத்திலும் தான் இருப்பதாக கூறி ரசிகர்களிடம் இன்னொரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஏற்கனவே மலையாளத்தில் 'ஆடு, ஆடு 2' என இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தற்போது அதன் மூன்றாம் பாகமாக 'ஆடு 3' என்கிற பெயரில் உருவாகி வருகிறது, இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கும் இந்த படத்தில் நடிகர் விநாயகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது.

இதன் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கும்போது நடிகர் விநாயகனுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கொச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தசையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய பின் அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !