உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்?

தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்?


சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பராசக்தி'. இப்படத்தை ஜனவரி 10ம் தேதி தமிழில் வெளியிடுகிறார்கள். தமிழில் தயாராகியுள்ள இப்படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து அன்றைய தினமே வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.

ஆனால், தற்போது தெலுங்கில் இப்படத்தை வெளியிடுவதில் ஒரு சந்தேகம் நிலவுவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் சங்கராந்தியை முன்னிட்டு நேரடித் தெலுங்குப் படங்கள் வெளியாகின்றன. அந்தப் போட்டியில் சிரஞ்சீவி, பிரபாஸ், ரவி தேஜா, சர்வானந்த், நவீன் பொலிஷெட்டி ஆகியோரது படங்கள் உள்ளன.

தெலுங்கில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா ஆகியோரில் மற்ற இருவரைக் காட்டிலும் ஸ்ரீலீலா மிகவும் பிரபலம். இருந்தாலும் டப்பிங் படமான 'பராசக்தி' படத்திற்கு மிகக் குறைந்த அளவே தியேட்டர்கள் கிடைக்கும் சூழல் உள்ளதாம். அதனால், படத்தை ஜனவரி 26, குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளார்கள் என்று ஒரு தகவல் பரவி இருக்கிறது. அது உண்மையா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !