ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து
ADDED : 16 hours ago
தமிழ் சினிமா உலகின் சீனியர் தம்பதியினரான ராதிகா மற்றும் சரத்குமார் இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நேற்று மதியம் தங்களது நண்பர்களுக்கு லன்ச் விருந்து கொடுத்துள்ளனர்.
அந்த விருந்தில் ராதிகாவை வைத்து தற்போது 'தாய் கிழவி' படத்தைத் தயாரிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். த்ரிஷா, ஜெயசுதா, ரம்யா கிருஷ்ணன், ஷோபனா, குஷ்பு, சங்கீதா, லிஸி, நிரோஷா, நடிகர் அசோக் செல்வன், நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் உள்ளிட்ட பிரபலங்களும், ராதிகா சரத்குமார் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து லிஸி, “உங்கள் அனைவருக்கும், இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஒவ்வொரு வருடமும் சிறப்பான லன்ச் தரும் சரத்ஜி மற்றும் ராதிகா ஆகியோருக்கு மிக்க நன்றி,” என்று பதிவிட்டுள்ளார்.