உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள்

'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள்

2026ம் ஆண்டு இன்று இனிதே ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2025ம் வருடத்தில் தமிழ் சினிமாவில் மொத்தம் 280க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தன. அந்த எண்ணிக்கையை 2026ம் ஆண்டு முறியடிக்குமா என்பது வருடக் கடைசியில் தான் தெரியும். இருந்தாலும் இந்த வருடமும் சாதனை வெளியீடு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்குக் காரணம், இந்த வருடத்தின் முதல் வெள்ளியான நாளை ஜனவரி 2ல் ஆறு படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று ஜனவரி 1ம் தேதி தமிழ் சினிமா வெளியீடு, டப்பிங் படத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் கன்னடத்தில் தயாரித்திருக்கும் மார்க் திரைப்படத்தில் சுதீப் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் கடந்தவாரம் கன்னடத்தில் வெளியானது. சில காரணங்களால் இப்படத்தின் தமிழ் டப்பிங் வெளியீட்டை இன்று தள்ளி வைத்தனர். அதன்படி இன்று படம் வெளியாகி உள்ளது. 2026ம் ஆண்டின் தமிழ் திரைப்படங்களின் நேரடி வெளியீடுகள் நாளை ஆரம்பமாக உள்ள நிலையில் இன்று டப்பிங் படமான மார்க், 2026 வெளியீடுகளை ஆரம்பித்து வைத்துள்ளது.

நேரடி தமிழ்ப்படம் வெளியாவது போல இப்படத்திற்கு குறிப்பிடத்தக்க அளவில் தமிழகத்தில் தியேட்டர்கள் கிடைத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !