பிளாஷ்பேக் : சிவாஜி பட ரீமேக்கில் கமல்
ஹிந்தி மற்றும் தெலுங்கு ரீமேக் படங்கள் அதிகமாக வந்து கொண்டிருந்த 80 காலகட்டத்தில் 1960 களில் வெளியான 'படிக்காத மேதை' என்ற படம் 'பேர் சொல்லும் பிள்ளை' என்ற பெயரில் ரீமேக் ஆனது.
20 வருடங்களுக்குப் பிறகு ரீமேக் ஆனதால் அந்த காலகட்டத்திற்கு ஏற்ப காட்சிகளை மாற்றி திரைக்கதையை மாற்றி அடிப்படை கதையை மட்டும் மாற்றாமல் உருவான படம் 'பேர் சொல்லும் பிள்ளை'. படிக்காத மேதை படத்திற்கு வசனம் எழுதிய கே எஸ் கோபாலகிருஷ்ணன் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்திற்கும் வசனம் எழுதியது குறிப்பிடத்தக்க அம்சம்.
பின்னர் அது தெலுங்கில் ராமு (1987)என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில் 'கிருஷ்ணுடு' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது .
படிக்காத மேதை படத்தில் சிவாஜி நடித்த கேரக்டரில் கமலஹாசன் நடித்தார். கண்ணாம்பா நடித்த கேரக்டரில் கே ஆர் விஜயா நடித்தார். ஈ வி சரோஜா நடித்த கேரக்டரில் ராதிகா நடித்தார், சிஐடி சகுந்தலா நடித்த கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார். ஒரு பெரிய பணக்கார குடும்பத்திற்கு வேலைக்காரராக செல்லும் ஒரு அனாதை இளைஞர் அந்த குடும்பத்து வாரிசுகள் சொத்துக்காகவும் ஈகோ வாலும் மோதிக் கொண்டிருக்கும்போது அவற்றை சமாளித்து குடும்பத்தை காப்பாற்றுவது படத்தின் கதை.
இரண்டு காலகட்டங்களில் வழியாக படிக்காத மேதை, பேர் சொல்லும் பிள்ளையும் பெரிய வெற்றி பெற்றது. 'படிக்காத மேதை' படத்தை பீம்சிங் இயக்கினார், 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தை எஸ்பி முத்துராமன் இயக்கினார்.