உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாலையைக் கடக்கும்போது பைக் மோதியதில் மனைவியுடன் வில்லன் நடிகர் காயம்

சாலையைக் கடக்கும்போது பைக் மோதியதில் மனைவியுடன் வில்லன் நடிகர் காயம்


விக்ரம் நடித்த 'தில்' படத்தில் அவருக்கு வில்லனாக என்கவுண்டர் சங்கர் என்கிற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி.. தொடர்ந்து பல படங்களில் வில்லனாகவும் ஒரு காலகட்டத்தில் காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த ஆசிஷ் வித்யார்த்தி சமீப காலமாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு விட்டார். அந்த வகையில் கடந்த வருடம் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான 'ஆவேசம்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2023ல் ரூபாலி பருவா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் தனது மனைவியுடன் தான் வசிக்கும் கவுகாத்தி பகுதியில் உள்ள சாலையை கடந்தபோது அந்த பக்கம் வேகமாக வந்த இருச்சக்கர வாகனம் மோதி இருவருக்கும் காயம் ஏற்பட்டது இது குறித்த தகவலை தனது சோசியல் மீடியா சாட்டிங்கின் போது தெரிவித்துள்ள ஆசிஷ் வித்யார்த்தி, “மிகப்பெரிய காயம் ஒன்றும் இல்லை. அதுவும் நான் நன்றாகவே இருக்கிறேன். என் மனைவிக்கு தான் கொஞ்சம் சிறிய காயம். பயப்படும்படி ஒன்றும் இல்லை. இதை யாரும் பெரிது படுத்த வேண்டாம். உங்களுக்கு ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தை தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Senthoora, Sydney
2026-01-05 05:53:32

சரி, உங்க முதல் மனைவியிடம் மன்னிப்பு கேட்டீங்களா? அவங்க சாபம் தான் விபத்து, பார்த்து நடந்துக்கோங்க.