உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பராசக்தி' படத்தில் அண்ணாதுரை... கருணாநிதியும் இருக்கிறாரா?

'பராசக்தி' படத்தில் அண்ணாதுரை... கருணாநிதியும் இருக்கிறாரா?


சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வாமுரளி, ஸ்ரீலீலா நடித்த பராசக்தி படம் ஜனவரி 10ல் ரிலீஸ். இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி 1964ல் மதுரையில் கதை நடக்கிறது. ரயில்வே ஊழியராக சிவகார்த்திகேயன், மாணவராக அதர்வா முரளி, போலீஸ் அதிகாரியாக ரவிமோகன் வருகிறார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டம், மாணவர்கள் வன்முறை, போலீஸ் துப்பாக்கிசூடு, அரசியல் விவகாரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா காதல் காட்சியும் இடம் பெற்றுள்ளது. அதில் சில வசனங்கள் கவனம் பெற்றுள்ளன.

டிரைலரில் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை வருகிறார். இந்தி எதிர்ப்பு போராளியாக அதர்வா முரளி காட்டப்படுகிறார். பின்னர், அவர் அண்ணன் சிவகார்த்திகேயனும் அதில் தீவிரமாக ஈடுபட்டு, போலீசிடம் அடிவாங்குவதாக காண்பிக்கப்படுகிறது. 1964ல் கதை நடப்பதால், அப்போது காங்கிரஸ் என தெரிகிறது. டிரைலரில் கருணாநிதி சம்பந்தப்பட்ட வசனம், காட்சிகள் இல்லை. படத்தில் அது சஸ்பென்ஸ் ஆக இருக்கும் என தெரிகிறது. படத்தை தயாரித்து இருப்பது கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த ஆகாஷ் பாஸ்கரன், படத்தை வெளியிடுவது முதல்வரின் பேரன், துணை முதல்வரின் மகன் இன்பன் உதயநிதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

sankar, Nellai
2026-01-07 16:50:33

படம் போனியாகாது