சென்சார் சான்றிதழ் வரலையா : டென்ஷனில் பராசக்தி, ஜனநாயகன் குழு
விஜய் நடித்த ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதியும், சிவகார்த்திகேயனின் பராசக்தி ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது. ஆனால், இன்னமும் அதிகாரப்பூர்வமாக தியேட்டரில் புக்கிங் தொடங்கவில்லை. என்ன பிரச்னை என்று விசாரித்தால், 2 படங்களுக்கும் இன்னமும் சென்சார் சான்றிதழ் கைக்கு வரவில்லை.
பராசக்தி படம் சென்சாரில் பிரச்னைகளை சந்தித்ததால் ரிவைசிங் கமிட்டிக்கு போய் இருக்கிறது. அங்கே இருந்து கிளியர் ஆகி, பட சான்றிதழ் வரவில்லை. ஜனநாயகன் சென்சார் முடிந்துவிட்டது. ஆனாலும், ஏனோ அதிகாரி கையெழுத்து போட்டு சான்றிதழ் கொடுக்கவில்லை. இதனால் திக்திக் மனநிலையில் இரண்டு படக்குழுக்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் இருக்கிறார்கள். எப்படியும் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும். பட ரிலீசில் பிரச்னை வராது. ஆனாலும், அது லேட் ஆவதால் வீண் டென்சன் என்கிறார்கள்.
இதற்கிடையில் ஜனநாயகன் படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறோம். எங்களுக்கு அதிக பங்கு தரணும் என்று தியேட்டர் அதிபர்களுக்கு வினியோகஸ்தர்கள் பிரஷர் கொடுப்பதாலும், பல இடங்களில் தியேட்டர் முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
இந்த படங்கள் தவிர, பிரபாசின் தி ராஜா சாப், சிரஞ்சீவியின் மன சங்கர வரபிரசாத் காரு படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அந்த படங்கள் குறித்து யாரும் பேசவில்லை. அந்த படக்குழுவும் இதுவரை தமிழகம் வந்து படம் குறித்து பேசவில்லை.