சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ?
'ஜனநாயகன், பராசக்தி' இரண்டு படங்களைப் பற்றித்தான் சினிமா உலகிலும், சினிமா ரசிகர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தடுத்து டிரைலர் வெளியீடு, ஒரே நாளில் டிவியில் இரண்டு படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பு என அனைத்துமே ஏட்டிக்குப் போட்டியாக நடந்து வருகிறது.
'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் 'ஜனநாயகன்' படத்துடன் போட்டியாக வெளியாவது குறித்து 'அண்ணன் தம்பி பொங்கல்' என்றார். விஜய்யின் கூட இருக்கும் ஜெகதீஷைத் தொடர்பு கொண்டு பேசியது குறித்தும் சொன்னார். பத்து நிமிடங்களில் ஜெகதீஷ் மீண்டும் தொடர்பு கொண்டு தன்னிடம் பேசியதாகவும், விஜய் சாரிடம் டீடெயிலாக சொல்லிவிட்டதாகவும், அவர் 'ஆல் ஓகே, உங்களுக்கு வாழ்த்து சொல்ல சொன்னாரு' என்று ஜெகதீஷ் பதிலளித்தது குறித்தும் பேசினார் சிவகார்த்திகேயன்.
இருந்தாலும், 'சிலருக்கு வன்மம், சிலருக்கு வியாபாரம்' என மாத்தி மாத்தி பேசுகிறார்கள் என்றார் சிவகார்த்திகேயன்.
அடுத்து 'தி கோட்' படம் வெளிவந்த போது விஜய்யைத் தொர்பு கொண்டு பேசியது குறித்தும், அதற்கு விஜய் நன்றி தெரிவித்தது குறித்தும் குறிப்பிட்டார்.
'தி கோட்' வெளியான போது சிவகார்த்திகேயனுடன் போனில் பேசிய விஜய், தற்போது சிவகார்த்திகேயனுடன் போனில் பேசுவதைத் தவிர்த்து, அவர் உடன் இருக்கும் ஜெகதீஷை விட்டே பதில் சொல்ல சொன்னது குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்புகிறார்கள்.
'பராசக்தி' படம் தனக்கு போட்டியாக வருவதை விஜய் விரும்பவில்லை என்பதால்தான் அவர் சிவகார்த்திகேயன் பேச நினைத்த போதும் பேசுவதைத் தவிர்த்தாரா என்ற சந்தேகம் வலுப் பெறுகிறது.