30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர்
ADDED : 4 days ago
ஹிந்தியில் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா, மாதவன், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் துரந்தர். கடந்த டிசம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வந்த இந்த படம் இந்திய உளவுத்துறை நிறுவனமான ரா நடத்திய ரகசிய புலனாய்வு குறித்த கதையில் உருவாகி இருந்தது. இந்த படத்தின் கதை பாகிஸ்தானுக்கு எதிராக இருப்பதாக சொல்லி 6 இஸ்லாமிய நாடுகள் தங்கள் நாட்டில் வெளியிட தடை செய்தனர். இருப்பினும் வசூல்ரீதியாக எந்தவித பாதிப்பும் இல்லாமல் திரைக்கு வந்து 30 நாட்கள் ஆகும் நிலையில் இதுவரை துரந்தர் படம் 1,240 கோடி வசூல் செய்திருக்கிறது. இதை படக் குழு ஒரு போஸ்டர் மூலம் அறிவித்திருக்கிறது. அதோடு இந்தியாவில் 968 கோடியும், வெளிநாடுகளில் 272 கோடியும் இப்படம் வசூலித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.