அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை
ADDED : 6 days ago
மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்திக் குமார், சஞ்சய் தத், போமன் இராணி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தி ராஜா சாப். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை பீப்பிள் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. ஜனவரி 9-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்த, தி ராஜா சாப் படத்தின் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த இரண்டு நாடுகளிலும் தலா 17,500 க்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. அதனால் ஜனவரி 8-ம் தேதி பிரிமியர் காட்சிகள் தொடங்கும் முன்னதாக அங்கு டிக்கெட் முன்பதிவு இன்னும் பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளார்கள்.