ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம்
விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் வருகிற ஒன்பதாம் தேதி திரைக்கு வருகிறது. வினோத் இயக்கி அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், தற்போது டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. அதோடு இந்த படம் தொடங்கப்பட்டதில் இருந்தே தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்கிற செய்திகள் வெளியாகி வந்தன. இப்படத்தின் ட்ரைலர் வெளியான பிறகு கிட்டத்தட்ட அது உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் தற்போது ஜனநாயகன் படத்தில் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் 100 கோடிக்கு மேல் வாங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு ஜனநாயகன் திரைக்கு வந்து நான்கு வாரங்களில் ஓடிடியில் வெளியாகிறதா? இல்லை 8 வாரங்களுக்கு பிறகுதான் வெளியாகிறதா என்பது அப்படத்தின் தியேட்டர் வசூலை பொறுத்தே முடிவு எடுக்கப்பட உள்ளதாம். அதோடு இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு 31 கோடிக்கு மேல் நடைபெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.