உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப்

20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப்

வரும் சங்கராந்தி பண்டிகை வெளியீடாக தெலுங்கில் பிரபாஸ், சிரஞ்சீவி ஆகியோரின் படங்கள் ரிலீசுக்கு தயாராக நிற்கின்றன. மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராஜா சாப் திரைப்படம் வரும் ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நிதி அகர்வால் ,மாளவிகா மோகனன், ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர், தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் தற்போது புதிய அப்டேட்டாக படத்தின் நீளம் கிட்டத்தட்ட 15லிருந்து 20 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடும் விதமாக இறுதி படத்தொகுப்பு செய்யப்பட்டிருந்தாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு கட்டத்தில் சோர்வு ஏற்படும் என பிரபாஸும் படத்தின் இயக்குனர் மாருதியும் உணர்ந்ததால் கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகள் வரை ட்ரிம் செய்யும் முடிவுக்கு வந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !