பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் நடிகை மஞ்சு வாரியர், 'அசுரன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து 'துணிவு, வேட்டையன், விடுதலை 2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். துணிவு படத்தில் அஜித் உடன் இணைந்து நடித்தபோது அஜித் மற்றும் அவரது குழுவினருடன் சேர்ந்து தொலைதூர பைக் பயணங்களில் ஈடுபட்டார். அப்போது இருந்து பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி கற்றுக் கொண்டதுடன் ஒரு விலை உயர்ந்த பைக் ஒன்றையும் தனக்கென சொந்தமாக வாங்கினார் மஞ்சு வாரியர்.
அவ்வப்போது சில இடங்களுக்கு அவர் பைக்கில் பயணிக்கும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் கூட அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார் இந்த நிலையில் புது வருடம் பிறந்ததை தொடர்ந்து ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி சாலையில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார் மஞ்சு வாரியர். இது குறித்த வீடியோ ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, “எவ்வாறு இருந்ததோ எவ்வாறு இருக்கிறதோ எவ்வாறு இருக்கப் போகிறதோ அனைத்துக்கும் நன்றி” என்று புத்தாண்டு ஸ்லோகன் ஒன்றையும் பதிவிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.