இளவரசியாக நடிக்கும் ரக் ஷனா
'திரெளபதி 2' படத்தில் இளவரசியாக நடிக்கிறார் ரக் ஷனா இந்துசூடன். இவர் இதற்கு முன்பு விதார்த் ஜோடியாக 'மருதம்' படத்தில் 8 வயது பையனின் அம்மாவாகவும், மறைந்த மனோஜ் பாரதிராஜா இயக்கிய 'மார்கழி திங்கள்' படத்தில் பள்ளி மாணவியாகவும் நடித்தவர். தாய்மொழி மலையாளம் என்றாலும் நன்றாக தமிழ் பேசக்கூடியவர். அதனால்தான் 'திரெளபதி 2' படத்தில் இவரை நடிக்க வைத்தாராம் இயக்குனர் மோகன்.ஜி. அந்த கேரக்டருக்காக கொஞ்சம் வெயிட் போட்டு இருக்கிறார்.
கதைப்படி இவர் 14ம் நுாற்றாண்டை சேர்ந்த காஞ்சிபுரம் சமஸ்தானம் குமரலட்சுமணர் மகளாக வருகிறார். தன்னுயிரை விட தர்மத்தை காப்பதே லட்சியமாக கொண்டவர். தியாகத்தின் ஒளியாக வருபவர் என படத்தில் கூறப்படுவதால் கதையில் இவர் கேரக்டருக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது என கூறப்படுகிறது. ரிச்சர்ட் மனைவியாக வரும் இவர் கர்ப்பிணியாகவும் நடித்துள்ளார். இவர்தான் சர்ச்சைக்கு உள்ளான 'எம்கோனே' பாடலில் வருபவராம், பொதுவாக, சேர, சோழ, பாண்டியர், பல்லவர்களை முன்னுறுத்தியே பல தமிழ் படங்கள் வந்துள்ளன. வட மாவட்டத்தை ஆண்ட மன்னர்கள், அவர்களின் வாழ்வியல், போர், தியாகத்தை முன்னிறுத்தி திரெளபதி 2 வருகிறதாம்.