உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன்

விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன்


'ஜனநாயகன்' படத்துடன் தனது கடைசி திரைப் பயணத்தை முடித்துக் கொண்டு தீவிர அரசியலில் பயணிக்க இருக்கிறார் விஜய். அவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் திருப்புமுனையைக் கொடுத்த படம் 'பூவே உனக்காக'. அந்தப் படத்திற்குப் பிறகுதான் விஜய், அனைத்து ரசிகர்களின் மனதில், குறிப்பாக குடும்ப ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

விக்ரமன் இயக்கத்தில் 1996ல் வெளிவந்த அந்தப் படம் 250 நாட்களுக்கும் மேலாக ஓடி பெரிய வெற்றியைப் பெற்றது. அதன்பின் ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு விக்ரமன் இயக்கத்தில் 'உன்னை நினைத்து' படத்தில் நடிக்க ஆரம்பித்தார் விஜய். ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலேயே இயக்குனர் விக்ரமன், விஜய் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஒரு காட்சியில் மரத்தின் மீது விஜய்யை ஏறச் சொன்னதாகவும், அதற்கு விஜய் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது என்றும் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. அதன்பின் அந்தப் படத்தில் விஜய்க்குப் பதிலாக சூர்யா நடிக்க படம் 2002ல் வெளிவந்து 100 நாள் ஓடியது.

இயக்குனர் விக்ரமன் தற்போது சில வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இன்று, “உன்னை நினைத்து படத்தில் இடம் பெற்ற என்னை தாலாட்டும் பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் Social மீடியாவில் வைரல் ஆனது..இந்த பாடலை தளபதி விஜய் அவர்களை வைத்து தான் முதலில் படமாக்கி இருந்தேன்..அந்த நினைவுகள் தோன்ற, அந்த பாடல் சம்மந்தமான பழைய வீடியோ கேசட் ஒன்று கிடைத்தது..மிகவும் டேமேஜ் ஆகியிருந்த அந்த வீடியோவை உங்கள் பார்வைக்கு போஸ்ட் செய்கிறேன்... மிஸ்டர் சூர்யாவின் இப்போதைய வீடியோவுடன், இதை ஒப்பீடு செய்ய வேண்டாம். இருவருமே சிறந்த நடிகர்கள்,” என்று பதிவிட்டு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ: https://www.facebook.com/reel/2351576661949689


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Rock
2026-01-07 15:05:18

visai endrumae nandri kettavar