உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சண்டை காட்சியில் எஸ்.ஜே.சூர்யா படுகாயம் : கில்லர் படப்பிடிப்பு நிறுத்தம்

சண்டை காட்சியில் எஸ்.ஜே.சூர்யா படுகாயம் : கில்லர் படப்பிடிப்பு நிறுத்தம்

நடிகராக பிசியாகி விட்டார் எஸ்.ஜே.சூர்யா. தமிழ், தெலுங்கில் மோஸ்ட் வாண்டட் நடிகராக இருக்கிறார். என்றாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது 'கில்லர்' என்ற படத்தை அவர் இயக்கி, நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பனையூரில் தனியார் ரெசார்ட் ஒன்றில் நடந்து வருகிறது.

நேற்று அங்கு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ரோப் கட்டி சண்டை காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. காட்சி முடிந்தும் ரோப்பில் இருந்து இறங்கும்போது தடுமாறிய அவர் அங்கிருந்த கம்பி ஒன்றின் மீது மோதினார். இதனால் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் அதிகமாக வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் அருகேயுள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 2 கால்களிலும் 2 தையல்கள் போடப்பட்டன. அவரை 2 வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதை தொடர்ந்து படப்பிடிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !