உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்சிக் படம் : யஷ் பிறந்தநாளில் இந்த மாதிரியா அறிமுக வீடியோ வெளியிடுவது.?

டாக்சிக் படம் : யஷ் பிறந்தநாளில் இந்த மாதிரியா அறிமுக வீடியோ வெளியிடுவது.?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எப் பட புகழ் யஷ் 'டாக்சிக்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுடாரியா, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து இந்த படத்திலிருந்து கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியீட்டு வருகின்றனர்.

இன்று யஷின் 40வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு டாக்சிக் படத்தில் ரயா எனும் கதாபாத்திரத்தில் யஷ் நடித்துள்ளதாக அவரின் அறிமுக வீடியோ உடன் அறிவித்துள்ளனர். இந்த அறிமுக வீடியோ டாக்சிக் படம் ஹாலிவுட் படமான பீக்கி பைலன்டர்ஸ் ஸ்டைலில் உருவாக்கியுள்ளனர் என்பது தெரிகிறது. மேலும், இந்த அறிமுக வீடியோவில் ஒரு 18+ காட்சிகளும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் ஸ்டைலில் அறிமுக வீடியோ இடம் பெற்று இருந்தாலும் ஒரு முன்னணி நடிகரின் படத்திற்கு, அதுவும் பிறந்தநாளில் இப்படி 18+ காட்சி அமைப்புடன் வீடியோ வெளியிடுவதா என விமர்சனங்களும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !