உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்..

'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்..

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் 'தக் லைப்'. அப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்த போது பேசிய கமல்ஹாசன், தமிழிலிருந்து வந்ததுதான் கன்னடம் என போகிற போக்கில் பேசினார்.

அது கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகளைக் கோபப்படுத்தியது. கர்நாடகா அமைச்சர் உட்பட பலரும் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதை எதிர்த்தனர். கன்னட பிலிம் சேம்பர் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதித்தது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கமல்ஹைசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சொன்னார்.

அதன்பின் உச்சநீதிமன்றம் வரை வழக்கு சென்றது. படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது, படத்தைத் திரையிட மாநில அரசு நடவடிக்க எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. இருந்தாலும் அதன்பின் அங்கு படத்தை வெளியிடும் முடிவை 'தக் லைப்' குழுவினரே கைவிட்டனர்.

அப்போது கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும், 'தக் லைப்' படத்திற்கு ஆதரவாகவும் தமிழ்த் திரையுலகத்தில் இருந்து யாரும் குரல் கொடுக்கவில்லை. நடிகர் சங்கம் மட்டும் ஆதரவாக அறிக்கை வெளியிட்டது.

அப்போது அரசியல் கட்சியின் தலைவராகவும், நடிகராகவும் உள்ள கன்னடத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அவரது கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வந்தார். அவர் கூட கமல்ஹாசனுக்கு ஆதரவாக எந்த குரலும் கொடுக்கவில்லை. ரஜினிகாந்த் உள்ளிட்ட வேறு எந்த நடிகர்களும் எதுவும் பேசவில்லை.

பெங்களூருவில் தமிழ்ப் படங்கள் அதிகமாகத் திரையிடப்படும். அதனால், அங்குள்ள அமைப்புகளையும், அந்த வியாபாரத்தையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என யாருமே குரல் எழுப்பவில்லை.

இன்று விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்குத் தணிக்கை சான்று வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கன்னடத் தயாரிப்பு நிறுவனம் படத்தைத் தயாரித்திருந்தாலும் தற்போது சில இயக்குனர்கள், நடிகர்கள் விஜய்க்கு ஆதரவாகவும், 'ஜனநாயகன்' படத்திற்கு ஆதரவாகவும், அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !