உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம்

தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம்

2026 பொங்கலை முன்னிட்டு நாளை ஜனவரி 9ம் தேதி விஜய் நடித்த 'ஜனநாயகன்' படமும், 10ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' படமும் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தராத காரணத்தால் நீதிமன்றத்தை நாடிய தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. நாளை காலை 10 மணிக்கு மேல் தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஜனநாயகன் பட வெளியீடு தள்ளிப்போய் விட்டது.

'பராசக்தி' படத்தை ரிவைசிங் கமிட்டி பார்த்து நீக்கப்பட வேண்டியவற்றை சொல்லிவிட்டார்களாம். அவற்றை மாற்றித் தரும் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளார்களாம். அதில் திட்டமிட்ட நேரத்தை விட தாமதம் ஏற்பட்டுள்ளதாம். அதை முடித்து தணிக்கை வாரியத்திடம் ஒப்படைத்த பின்புதான் அவர்கள் சான்றிதழ் வழங்குவார்களாம். இதன் நிலை என்னவென்பதும் நாளை தெரிந்துவிடும் என்கிறார்கள். அதனால், நாளை படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு வரலாம்.

தற்போதைய நிலவரப்படி 'பராசக்தி' படமும் தள்ளிப் போகவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். அடுத்த வாரம் ஜனவரி 14ம் தேதி புதிய வெளியீட்டுத் தேதி இருக்கலாம் என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

ஒருவேளை ஜனநாயகனை தொடர்ந்து பராசக்திக்கும் தணிக்கையில் சிக்கல் ஏற்பட்டால் இந்த ஆண்டு பொங்கலுக்கு தமிழ் படங்களே இல்லை என்றாகிவிடும். பிரபாஸ் நடித்த தி ராஜா சாப், சிரஞ்சீவியின் மன சங்கர் வரபிரசாத் காரு ஆகிய தெலுங்கு படங்களை மட்டுமே திரையிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என விநியோகஸ்தர்கள் தியேட்டர் அதிபர்களும் அச்சப்படுகின்றன. கடந்தகால தமிழ் சினிமா வரலாற்றில் எந்த காலகட்டத்திலும் இப்படி ஒரு நிலை வந்ததில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
2026-01-09 09:38:49

நீதிமன்ற தீர்ப்பையே மதிக்காதவர்கள் தனிக்கை குழுவின் தீர்ப்பையா மதிக்க போகிறார்கள்.....!!!


முருகன்
2026-01-08 19:06:39

இது மட்டும் நடந்தால் நன்றாக இருக்கும்