பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம்
ADDED : 3 days ago
மலையாளத்தில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்து வெளிவந்த படம் 'பிரம்மயுகம்'. ஹாரர், த்ரில்லர் கதை களத்தை மையப்படுத்தி வெளியான இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே இந்த படத்திற்கு விருது விழாக்களில் பல அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் வருகின்ற பிப்ரவரி 12ந் தேதியன்று 'Where the forest meets the sea?' என்கிற சிறப்பு திரையிடலில் திரையிட மம்முட்டியின் 'பிரம்மயுகம்' படம் தேர்வாகியுள்ளது. நாட்டுப்புற கதைகளை அடிப்படையாக கொண்ட திகில் படங்களுக்காக நடத்தப்படும் இந்த திரையிடல் ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ளது. இப்பிரிவில் திரையிட தேர்வான முதல் இந்திய படம் என்கிற பெருமையை பிரம்மயுகம் படம் பெற்றுள்ளது.