ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கருப்பு'. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமம் வியாபாரம் நிறைவு பெறாததால் இதன் ரிலீஸ் தேதி முடிவாகமல் இருந்தது. ஆனால், தற்போது கருப்பு படத்தின் வருகின்ற பிப்ரவரி 19ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இப்போது இதே தேதியில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் பல வருடங்களாக கிடப்பில் உள்ள 'துருவ நட்சத்திரம்' படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் சிக்கல்கள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது என்கிறார்கள். இதனால் துருவ நட்சத்திரம் படத்தையும் அதே பிப்ரவரி 19ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.