'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள 'பராசக்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் ஸ்ரீலீலா. பராசக்தியில் நடித்து குறித்து ஸ்ரீலீலா கூறியதாவது: ‛பராசக்தி' திரைப்படம் எனக்கு ஆழமான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை மட்டும் கொடுக்கவில்லை, மறக்க முடியாத பல அழகான நினைவுகளையும் பரிசளித்துள்ளது. படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும் எல்லோரும் மகிழ்வுடன் பணியாற்றினோம். என் சினிமா கேரியரில் மறக்க முடியாத கதாபாத்திரத்தை கொடுத்ததற்காகவும் என் மீது வைத்த நம்பிக்கைக்கும் இயக்குநர் சுதா மேடத்திற்கு நன்றி.
சிவகார்த்திகேயனின் வெற்றி வெறும் விடாமுயற்சியால் மட்டுமே வந்தது அல்ல. அவரின் நல்ல எண்ணங்களும் இதில் உள்ளது. நடிகர்களிடம் மட்டுமல்லாது படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரிடமும் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். இந்த குணம்தான் அவரை கோடிக்கணக்கானவருக்கு பிடித்தமானவராக மாற்றியிருக்கிறது.
நான் நடனமாடிய பல பாடல்களில், ஜி.வி.பிரகாஷ் குமாரின் 'ஆர்யமாலா'வுக்கு என் மனதில் எப்போதும் ஸ்பெஷல் இடம் உண்டு. 'பராசக்தி' நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும்” என்றார்.