உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொங்கல் போட்டியில் விலகிய 'திரௌபதி 2, ஜாக்கி'

பொங்கல் போட்டியில் விலகிய 'திரௌபதி 2, ஜாக்கி'

2026 பொங்கலை முன்னிட்டு சில நாட்கள் முன்னதாக ஜனவரி 9ம் தேதி விஜய் நடித்த 'ஜனநாயகன்', ஜனவரி 10ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டன. ஆனால், இரண்டு படங்களுக்கும் தணிக்கையை முடித்துப் பெற தாமதம் இருந்தது. அதனால், 'ஜனநாயகன்' படக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அதன் விசாரணை நடந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இதன் காரணமாக பட வெளியீடு தள்ளிப் போனது.

'பராசக்தி' படக்குழு ரிவைசிங் கமிட்டி வரை சென்று அவர்களது வேலைகளை முடித்துக் கொடுத்து ஒரு நாள் முன்னதாக தணிக்கை சான்றிதழைப் பெற்று அறிவித்தபடி ஜனவரி 10ம் தேதி படத்தை வெளியிட்டது.

'ஜனநாயகன்' படம் தள்ளிப் போன காரணத்தால், இன்று ஜனவரி 14ம் தேதி கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்', யுவன் கிருஷ்ணா நடித்த 'ஜாக்கி' ஆகிய படங்களும், ஜனவரி 15ம் தேதி ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில்', ரிச்சர்ட் ரிஷி நடித்த 'திரௌபதி 2' ஆகிய படங்களும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டன.

தற்போது, 'ஜாக்கி' மற்றும் 'திரௌபதி 2' ஆகிய படங்களின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளனர். 'திரௌபதி 2' படம் 23ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 'ஜாக்கி' படத்தின் வெளியீட்டுத் தேதியை பின்னர் அறிவிப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கார்த்தி, ஜீவா படங்களுக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைத்ததால் இந்த படங்களுக்கு குறைந்த அளவிலேயே தியேட்டர்கள் கிடைத்துள்ளன. அதன்காரணமாக பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !