யஷ், பிரபாஸ் பாணியில் விஜய் சேதுபதி
ADDED : 21 hours ago
விஜய் சேதுபதி நடித்து வரும் படம் 'ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு'. விஜய் சேதுபதியுடன் சம்யுக்தா மேனன், தபு, துனியா விஜய்குமார், விடிவி கணேஷ், பிரம்மாஜி நடித்துள்ளனர். புரி கனெக்ட்ஸ் சார்பில் புரி ஜெகன்நாத், சார்மி கவுர், ஜே.பி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ஜே.பி.நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்துக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. 'அர்ஜூன் ரெட்டி', 'அனிமல்' ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசை அமைத்துள்ளார். விஜய் சேதுபதியின் பிறந்தநாளுக்கு வெளியிடப்பட்ட அவரது கேரக்டர் லுக்கில் அவர் யஷ் மற்றும் பிரபாஸ் பாணியில் போஸ் கொடுத்துள்ளார். பரபரப்பான ஆக்ஷன் படமாக தயாராகும் இந்த படம் 'கே ஜி எப்' பாணியிலான படம் என்று கூறப்படுகிறது.