உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026ம் ஆண்டிலும் தொடரும் வாராவார வெளியீடுகள்

2026ம் ஆண்டிலும் தொடரும் வாராவார வெளியீடுகள்

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக இடைவெளி இல்லாமல் வாராவாரம் புதிய படங்களின் வெளியீடுகள் நடந்து வருகிறது. கடந்த 2025ம் வருடத்தில் அப்படியான வெளியீடுகள் அதிகமாக வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 275ஐக் கடந்து புதிய சாதனை படைத்தது.

அதற்கு சற்றும் சளைக்காமல் 2026ம் வருடமும் அமையும் போலத் தெரிகிறது. இந்த வருடத்தின் முதல் வாரமான ஜனவரி 2ம் தேதி, “அனலி, டியர் ரதி, ஜஸ்டிஸ் பார் ஜெனி, காக்கா, தி பெட்' ஆகிய படங்கள் வெளியாகின. அப்படங்கள் ஒன்றிரண்டு நாட்கள் கூட தாக்குப் பிடித்து ஓடவில்லை. அதற்கடுத்து பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ல் 'பராசக்தி, 14ல் 'வா வாத்தியார்', 15ல் 'தலைவர் தம்பி தலைமையில்' ஆகிய படங்கள் வெளிவந்தன.

இந்த வாரம் ஜனவரி 23ம் தேதி, “திரௌபதி 2, ஹாட்ஸ்பாட் 2 மச், மாயபிம்பம்' ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றோடு அஜித் நடித்த 'மங்காத்தா' படம் மறு வெளியீடாக வர உள்ளது. விஜய் நடித்த 'தெறி' படத்தை அன்றைய தினம் வெளியிடுவதாக அறிவித்து, தற்போது தள்ளி வைத்துவிட்டனர்.

அடுத்த வாரம் ஜனவரி 30ம் தேதியும் நான்கைந்து புதிய படங்களை வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். அவற்றிற்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !