பார்வதியாக நடிக்கும் நபா நடேஷ்
தற்போதைய முன்னணி ஹீரோயின்கள் தெய்வ கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். 'ராமாயணா' படத்தில் சாய் பல்லவி, சீதா பிராட்டியாராக நடித்து வருகிறார், நயன்தாரா 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் அம்மனாக நடித்து வருகிறார். இவர்கள் பாணியில் 'நாகபந்தம்' படத்தில் பார்வதியாக நடித்து வருகிறார் நபா நடேஷ்.
இந்தப் படத்தை அபிஷேக் நாமா இயக்குகிறார். விராட் கர்ணா நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும் ஜகபதி பாபு, ஜெயப்பிரகாஷ், முரளி ஷர்மா, அவினாஷ் உள்ளிட்ட வளர் நடித்துள்ளனர்.
தற்போது நபா நடேஷின் பார்வதி தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. மகர சங்கராந்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த போஸ்டரில், பாரம்பரிய உடையில் நபா நடேஷ் மிகுந்த அழகும் ஆன்மிக ஒளியும் நிறைந்த தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அழகிய சேலை, நுட்பமான ஆபரணங்கள், அமைதியான முகபாவனை அனைத்தும் அவரது கதாபாத்திரத்தின் பக்தி, தூய்மை மற்றும் புராண அம்சத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவின் பழமையான விஷ்ணு கோவில்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் நாகபந்தம் திரைப்படம், புனித ரகசியங்களை மையமாக வைத்து, புராணம், சஸ்பென்ஸ் மற்றும் தெய்வீகம் கலந்து உருவாகிறது. கோடை விடுமுறை காலத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாககிறது என்கிறார் இயக்குனர் அபிஷேக் நாமா.