உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்'
'ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி, ஜப்பான்' படங்களை இயக்கிய ராஜூமுருகனின் அடுத்த படம் 'மை லார்ட்'. சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். பிரபல கன்னட நடிகையான சைத்ரா ஹீரோயின் ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
பல உண்மை சம்பவங்களை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, துாத்துக்குடி துப்பாக்கி சம்பவம், சிறுநீரக திருட்டு, ஆதார் அட்டை பிரச்னை என பல விஷயங்கள் கதையில் இருப்பதை சமீபத்தில் வெளியான டிரைலர் காண்பிக்கிறது. படத்தில் அரசியல் சட்டயர் அதிகம் இருப்பதாகவும் தகவல்.
படத்தை வந்தவாசி திமுக எம்எல்ஏ அம்பேத்கர் தயாரித்து இருக்கிறார். ராஜூமுருகனின் 'ஜிப்ஸி' படம் சென்சாரில் சிக்கியது. அந்த படத்துக்கு 48 கட் கிடைத்தது என சமீபத்தில் கூட அதில் நடித்த ஜீவா சொன்னார். 'மை லார்ட்' படத்துக்கும் சிக்கல் வருமா என்பது வருங்காலத்தில் தெரிய வரும்.