உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரதமர் ரசித்த திருவாசக பாடல்: ஜனவரி 22ல் வெளியிடுகிறார் ஜி.வி.பிரகாஷ்

பிரதமர் ரசித்த திருவாசக பாடல்: ஜனவரி 22ல் வெளியிடுகிறார் ஜி.வி.பிரகாஷ்


டில்லியில் மத்திய அமைச்சர் முருகன் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் திருவாசகம் பாடி அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தினார் இசையமைப்பாளர், நடிகரான ஜி.வி.பிரகாஷ். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவாம். அந்த கனவின் முதல் படியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு இசையமைத்து, அவற்றை உலகிற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் இப்போது தீவிரமாக இறங்கியிருப்பதாக தகவல். பாரம்பரிய ஆன்மிகப் பாடல்களை இன்றைய தலைமுறைக்கும் எளிதாக உணரச் செய்யும் வகையில், இசை வடிவமைப்பில் புதிய அணுகுமுறையை அதில் அவர் கையாள்கிறாராம்.

ஜி.வி. பிரகாஷ் குரலில் பிரதமர் மோடி ரசித்த திருவாசகம் முதல் பாடல், ஜனவரி 22ல் வெளியாகிறது !! அவரது அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலில் அந்த பாடல் வெளியாகிறது. விரைவில் அடுத்தடுத்த பாடல், ஆல்பம் வெளியாக உள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவும் திருவாசகத்துக்கு சிம்பொனி வடிவிலான ஆல்பத்தை 2005ம் ஆண்டு இசையமைத்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !