உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவி படத்தில் நடிக்க இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை

சிரஞ்சீவி படத்தில் நடிக்க இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை

நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர். சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வந்த 'மனா சங்கரா வர பிரசாத் காரு' படம் 300 கோடி வசூலை கடந்து வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து சிரஞ்சீவி 158வது படத்தை கன்னட சினிமாவை சேர்ந்த கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தை 'வால்டர் வீரையா' படத்தை இயக்கிய பாபி இயக்கவுள்ளார்.

இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதற்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துள்ளார் என தகவல் வெளியானதைத் தொடர்ந்து இப்போது இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு மகள் கதாபாத்திரம் இடம் பெறுகிறதாம். அதில் ஒரு இளம் நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என்பதற்காக நடிகைகள் கிர்த்தி ஷெட்டி, அனஸ்வரா ராஜன் என இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !