இம்மார்ட்டல் படம் குறித்து பகிர்ந்த இயக்குனர்
ADDED : 21 hours ago
இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், கயாடு லோகர் இணைந்து நடித்துள்ள படம் 'இம்மார்ட்டல்'. இதில் டி.எம்.கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இயக்குனர் கூறுகையில், இந்த படத்தின் முதல் பாதியை ரொமான்ஸில் கவனம் செலுத்தி, இரண்டாம் பாதியில் திரில்லர், பேன்டஸி என அழுத்தமான படமாக உருவாக்கியுள்ளோம். கொஞ்சம் உளவியலையும் சேர்த்து கூறியுள்ளோம். இது வெறும் த்ரில்லராக மட்டும் இல்லை எமோஷனலை முன்னிறுத்தியும் பேசும். காதல், பயம், திரில், திகில், இசை என நிறைய அடுக்குகளும் உள்ளது. இளைஞர்களுக்கான படமாக மட்டும் இல்லை, குடும்பங்களும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கும்படி தான் உருவாக்கியுள்ளோம் என்றார்.