உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கர' படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ்

'கர' படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ்

நடிகர் தனுஷ் தற்போது போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 'கர' எனும் படத்தில் நடித்துள்ளார். வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்திலிருந்து க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது விக்னேஷ் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் முதல் முறையாக கர படத்தை குறித்து கூறியதாவது, போர் தொழில் படம் வெளியான பிறகு தனுஷ் சார் என்னை தொடர்பு கொண்டு இணைந்து படம் பண்ணலாம் என கூறினார். அதன் பின்னர் இரு வெவ்வேறு நாளிதழ்களை வைத்து தான் கர படத்தின் கதையை உருவாக்கியுள்ளேன். கர படம் 90 காலகட்டத்தில் ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற கதையாக உருவாக்கியுள்ளோம். இதில் தனுஷ் கொஞ்சம் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !