பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வேண்டியது : சுதா
ADDED : 5 minutes ago
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் இணைந்து நடித்து கடந்த வாரத்தில் திரைக்கு வந்த படம் 'பராசக்தி' . விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 10 நாட்களில் ரூ.100 கோடி வசூலை எட்டி உள்ளது.
சுதா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, பராசக்தி படத்தில் கதையின் தேவைக்காக தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இருந்து ராணா டகுபதி மற்றும் பசில் ஜோசப் இருவரும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். முதலில் ராணா நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவை அணுகி பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த காலகட்டத்தில் அவர் கிங்டம் படத்தில் பிஸியாக நடித்து வந்ததால் நடிக்க முடியாமல் போனது என தெரிவித்துள்ளார்.