சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு
இயக்குனர் சுந்தர்.சி தற்போது நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்கி உள்ளார். இதையடுத்து மீண்டும் விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வந்தது. நேற்று படத்தின் புரோமோ வீடியோ வெளியானது.
சுமார் 5 நிமிடங்கள் 41 நொடிகள் கொண்ட இந்த வீடியோவில் விஷால், தமன்னா, யோகிபாபு ஆகியோரின் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. விஷால் அமைதியான புருஷனாகவும், வீட்டில் வேலை செய்பவராகவும், அவரது மனைவியாக தமன்னாவும், யோகி பாபு சீரியல் நடிகர் போன்றும் நடித்துள்ளனர்.
தமன்னாவை பொறுத்தமட்டில் விஷால் அமைதியானவர், வீட்டில் வேலை செய்பவர், ஆனால் அவர் அதிரடி ஆக் ஷன் நபர் என்பது அவருக்கே தெரியாது போன்று வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளனர். சுருக்கமாக சொன்னால் விஷால் வீட்டில் மாணிக்கம், வெளியே பாட்ஷா என்கிற மாதிரியான கதை.
இந்த படத்திற்கு ‛புருஷன்' என பெயரிட்டுள்ளனர். ஆக் ஷன், காமெடி எல்லாம் கலந்து இந்த வீடியோ வெளியாகி உள்ளது. ஆம்பள, ஆக் ஷன், மத கஜ ராஜா ஆகிய படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக விஷால், சுந்தர்.சி கூட்டணி அமைந்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.