ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : 1 days ago
அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, தயாரிப்பாளர் லலித் மகன் எல்.கே.அக் ஷய் குமார் இணைந்து நடித்து கடந்தாண்டு இறுதியில் வெளியான படம் 'சிறை'. உண்மை சம்பவத்தை பின்னணியாக வைத்து சிறை கைதி பின்னணியில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இப்படம் 25 நாட்களை கடந்தது. 7 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ஏற்கனவே 25 கோடி வசூலை கடந்து லாபத்தை தந்தது. தற்போது இப்படம் உலகளவில் ரூ. 31.58 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.22.27 கோடியும், கேரளாவில் ரூ.31 லட்சமும், கர்நாடகாவில் ரூ.1.05 கோடியும், வெளிநாடுகளில் ரூ.2.95 கோடியும் வசூலை குவித்துள்ளது.