வாசகர்கள் கருத்துகள் (1)
family என்பதையே falimy என்று படத்துக்கு பெயர் வைத்திருப்பார். emotional plus comedy movie... hotstar ல் பார்த்த ஞாபகம்...
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தை இயக்கியவர் நிதிஷ் சஹதேவ். 25 கோடி வசூலை தாண்டி படம் சென்று கொண்டிருக்கும் நிலையில் தினமலருக்கு அவத் அளித்த பேட்டி:
தலைவர் தம்பி தலைமையில் படம் பெரிய வெற்றி பெற்றது மகிழ்ச்சி. தமிழ், மலையாள சினிமாவில் இருந்து ஏகப்பட்ட பேர் போனில் வாழ்த்தி கொண்டு இருக்கிறார்கள். இதற்கு முன்பு பஷில் ஜோசப் நடித்த 'பாலிமி' படத்தை இயக்கினேன். அந்த படத்துக்கு நல்ல வரவேற்பு. இந்த படம் பார்த்துவிட்டு பஷில் ஜோசப் போன் செய்து பாராட்டினார். நான் நடித்த பராசக்தி படம் பார்த்தியா என கலாய்த்தார். அடுத்து, நான் மம்முட்டி படம் இயக்க உள்ளேன். சில வாரங்களில் பட வேலைகள் தொடங்க உள்ளது. அந்த டீமில் இருந்தும் பேசினார்கள். நான் வியந்த பலர் என்னிடம் போனில் பேசியது மறக்க முடியாதது.
கோட்டயத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம் பின்னணியில் இந்த படக்கரு உருவானது. அடுத்தடுத்த வீட்டில் ஒரே நேரத்தில் திருமணம், இறுதி சடங்கு நடந்தால் என்ன நடக்கும் என்ற மாறுபட்ட கோணத்தில் படத்தை இயக்கினேன். கதை, திரைக்கதையை பலரும் குறிப்பிட்டு பாராட்டினார்கள். நானும், என் நண்பர்கள் 3 பேரும் இணைந்து ஸ்கிரிப்ட் எழுதினோம். மலையாள படங்களுக்கே உரிய ஸ்பெஷல் பாணியில் கதை எழுதினோம். 45 நாட்களுக்குள் படத்தை முடித்துவிட்டோம். அதனால் செலவு அதிகம் பிடிக்கவில்லை.
மலையாளத்தில் காலை முதல் இரவு வரை படப்பிடிப்பு நடத்துவோம். அந்த கால்ஷீட் அப்படிப்பட்டது. அந்த அனுபவம் இருந்ததால் வேகமாக காட்சிகளை எடுக்க முடிந்தது. அதேபோல் சின்ன சின்ன கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததும் படத்தை ஹிட் ஆக்கியது. காமெடியும் வொர்க் அவுட் ஆனது.
இந்த நேரத்தில் நடிகர் வி டி வி கணேஷ்க்கு நன்றி சொல்கிறேன். அவர்தான் பாலமியை தமிழில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டார். அப்படிதான் ஜீவா பழக்கமானார். அவரிடம் இந்த கதையை சொல்ல, படம் தொடங்கியது. ஜீவாவுக்கும் படம் சிறப்பாக உருவானதில் பங்கு உண்டு. அவர் கிரியேட்டிவ் தயாரிப்பாளர். படத்தை இப்போதும் விளம்பரத்தி வருகிறார். படம் பார்த்துவிட்டு ஆர்.பி.சவுத்ரியும் பாராட்டி பேசியது மறக்க முடியாத விஷயம்.
கதை, திரைக்கதை, நடிகர்கள், டெக்னிஷியன்கள் என அனைவர் உழைப்பால் இந்த படம் வெற்றி பெற்றுள்ளது. ரஜினி, அஜித் உள்ளிட்டவரை வைத்து படம் இயக்க ஆசை. தமிழ் மக்களுக்கு மிக்க நன்றி. உண்மையை சொன்னால் ரசிகர்களின் ரசனை இப்போது நன்கு மாறி உள்ளது. அவர்கள் ஸ்டார், பட்ஜெட் பார்ப்பது இல்லை. நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு பெரிய நடிகர் படங்களை விட கதையம்சம் உள்ள படங்களைதான் கொண்டாடினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
family என்பதையே falimy என்று படத்துக்கு பெயர் வைத்திருப்பார். emotional plus comedy movie... hotstar ல் பார்த்த ஞாபகம்...