உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : இயக்குனராக சாதித்த நடன கலைஞர்

பிளாஷ்பேக் : இயக்குனராக சாதித்த நடன கலைஞர்

நடன இயக்குனர்களாக இருந்து திரைப்பட இயக்குனராக மாறியவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் வேதாந்தம் ராகவையா. ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு பாரம்பரிய குச்சிப்புடி நடன, நாடகக் குடும்பத்தைச் சேர்ந்த வேதாந்தம் ராகவையா, 30க்கும் மேற்பட்ட தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடப் படங்களை இயக்கியுள்ளார்.

குச்சிப்புடியின் புகழ்பெற்ற குடும்பங்களில் ஒன்றான, கலை இரத்தத்திலேயே ஊறியிருந்த வேதாந்தம் ராமய்யா மற்றும் அன்னபூர்ணம்மா தம்பதியருக்கு 1919ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி பிறந்த வேதாந்தம் ராகவய்யா, குட்டிச்சுப்பிடி நடனக் கலைஞர், இனிமையான பாடகர் மற்றும் தாள அமைப்பில் நிபுணர்.

திரைப்படத்தில் நடன இயக்குனராக அறிமுகமான அவர் பல படங்களில் குச்சிபுடி நடனத்தை அறிமுகப்படுத்தினார். நடனத்தை மையமாகக் கொண்ட 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார்.

தமிழில் தேவதாஸ், பிரேம பாசம், மணாளனே மங்கையின் பாக்கியம், அடுத்த வீட்டுப் பெண், மங்கையர் உள்ளம் இரு சகோதரிகள் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

sankar, Nellai
2026-01-30 17:45:09

நீங்கள் குறிப்பிட்ட ஐந்து படங்களுமே சிறப்பானவை என்று சொன்னால் மிகையில்லை