28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகன்லால். மம்முட்டியுடன் நடிக்கிறேன் : பிரம்மிக்கும் குஞ்சாகோ போபன்
மலையாளத்தில் சில வருடங்களாக மல்டி ஸ்டாரர் படங்கள் குறைந்து வந்த நிலையில் தற்போது அதை போக்கும் விதமாக மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் என மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் இணைந்து நடித்துள்ள படமாக பேட்ரியாட் உருவாகி உள்ளது. இந்த படத்தை விஸ்வரூபம் பட எடிட்டரும் டேக் ஆப், மாலிக் ஆகிய படங்களின் இயக்குனருமான மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். நயன்தாரா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். வரும் ஏப்ரல் 23ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் மோகன்லால், மம்முட்டி மற்றும் குஞ்சாக்கோ போபன் மூவரும் கிட்டத்தட்ட 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்திருப்பது தான். கடந்த 1998ல் இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான ஹரிகிருஷ்ணன்ஸ் படத்தில் தான் இவர்கள் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். சொல்லப்போனால் குஞ்சாக்கோ போபன் திரையுலகில் அடி எடுத்து வைத்த காலகட்டம் அது. தற்போது 28 வருடம் தாண்டியும் சினிமாவில் நடிப்பு பயணத்தை தொடர்வதும் மோகன்லால் மம்முட்டி ஆகிய இரண்டு ஜாம்பவான்களுடன் மீண்டும் இணைந்து நடிப்பதும் நினைப்பதற்கே பிரமிப்பாக உள்ளது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் குஞ்சாக்கோ போபன்.