சிரஞ்சீவி படத்தில் பிரியாமணி
ADDED : 1 days ago
தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த 'மனா சங்கரா வர பிரசாத் காரு' படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து சிரஞ்சீவி 158வது படத்தை கன்னட சினிமாவை சேர்ந்த கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். 'வால்டர் வீரையா' படத்தை இயக்கிய பாபி கொல்லி இயக்கவுள்ளார். படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என தகவல் வெளியானது. இந்நிலையில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க பிரியாமணி ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள். மேலும் படத்தில் ஒரு முக்கியமான போலீஸ் கதாபாத்திரம் உள்ளது. அதில் நடிக்க மலையாள சினிமாவின் உச்ச நடிகரான மோகன்லால் உடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை துவங்கி நடந்து வருகிறது.