வாசகர்கள் கருத்துகள் (1)
Great Music Director... Gifted some wonderful songs in Malayalam films. May his soul rest in peace
இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ் எனும் சங்கீத ராஜன், 70, உடல்நலக் குறைவால் இன்று(பிப்., 3) காலை காலமானார்.
நடிகர் தியாகராஜன் எழுதி, இயக்கிய பூவுக்குள் பூகம்பம் படம் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எஸ்.பி.வெங்கடேஷ் என்கிற சங்கீத ராஜன். தொடர்ந்து ‛‛சேலம் விஷ்ணு, காவல் பூனைகள், வடக்குவாசல், என் கணவர், ஏர்போர்ட், சினேகிதி, முனி முதல் பாகம், பாட்டாளி மகன்'' உட்பட தமிழில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மலையாளத்தில் அதிக படங்களுக்கு இசையமைத்துள்ளார். தவிர தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஒரியா, போஜ்புரி உள்ளிட்ட மொழிகளிலும் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளார். 80, 90களில் பிரபலமாக திகழ்ந்த இவர் பெரும்பாலும் பின்னணி படங்களின் இசைக்காக அதிகம் பேசப்பட்டார். மலையாள படத்திற்காக கேரள அரசின் விருதும் பெற்றவர் இவர்.
ஒரு வருடமாக நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று காலை சென்னையில் அவரது வீட்டில் காலமானார். இவருக்கு கோபால், சுகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்களும் இசையமைப்பாளர்களாக உள்ளனர். திருமணமான ஒரு மகளும் உள்ளார்.
இவரது உடல், சென்னை, ஆலப்பாக்கம், சாய்ராம் தெருவில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 1.00 மணி அளவில் போரூர் மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Great Music Director... Gifted some wonderful songs in Malayalam films. May his soul rest in peace