உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் கால் உடைந்தால் படம் ஹிட்டாகும்: நடிகர் ராஜசேகர் பேச்சு

என் கால் உடைந்தால் படம் ஹிட்டாகும்: நடிகர் ராஜசேகர் பேச்சு


தெலுங்கு நடிகர் ஷர்வானந்த், 'எங்கேயும் எப்போதும்' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர். இவர் தற்போது அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில் 'பைக்கர்' படத்தில் நடித்துள்ளார். அவருடன் ராஜசேகர், அதுல் குல்கர்னி, மாளவிகா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஏப்ரல் 3ம் தேதி ரிலீசாகிறது.

சென்னையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் ராஜசேகர் கூறியதாவது: மேடையில் தமிழ் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது மேடையில் பேசியவர்களை பார்த்தப்பின் இருக்கும் தமிழும் மறந்துவிட்டது. 3 மாதங்களுக்கு முன் எனது வலது கணுக்கால் உடைந்தது. அது இப்போதுதான் சரியாகி வருகிறது. இதற்கு முன் நான் நடித்த 'இதுதாண்டா போலீஸ்' படம் ரிலீசின் போது இடது கால் உடைந்திருந்தது. அந்த படம் ஹிட்டானது.

கால் உடைந்தால் படம் ஹிட் என்றார்கள். அப்படியெனில் இப்போதும் உடைந்த காலுடன் இருக்கிறேன், எனவே 'பைக்கர்' படமும் ஹிட்டாகும். படத்தின் ஹீரோ ஷர்வானந்த் என்னை அன்போடு பார்த்துக்கொண்டார், அவருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !