உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தவெக பிரசாரத்துக்கு செல்வது யார்?

தவெக பிரசாரத்துக்கு செல்வது யார்?


தமிழகத்தில் விஜயின் தவெகவினர் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்துள்ள விஜய், ஹீரோ, குழந்தை நட்சத்திரம் சேர்த்து 60க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அவர் முதன்முறையாக தேர்தலை சந்திக்கிறார். ஆனாலும் நட்பின் அடிப்படையில் விஜய்க்காக யாரும் பிரசாரம் செய்ய முன்வரவில்லை. அவரை வைத்து படம் இயக்கியவர்கள், அவருடன் நடித்தவர்கள், அவரின் நண்பர்கள் எல்லாமே மத்திய, மாநில ஆளுங்கட்சிகளுக்கு பயந்து பின் வாங்கிவிட்டார்கள்.

விஜய்க்கு ஆதரவாக தாடி பாலாஜி மட்டுமே பிரசாரம் செய்ய தயார். ஆனாலும் அவர் ஏடாகூடமாக பேசுவதால் அவரை பயன்படுத்த கட்சி தலைமை தயங்குகிறதாம். அதேபோல் மற்ற மாநிலத்தை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் கூட விஜய்க்கு ஆதரவாக பிரசாரம் செய்ய யோசிக்கிறார்களாம். அதேசமயம், விஜய் போட்டியிடும் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய்க்கு எதிராக பிரசாரம் செய்ய, அதிமுக, திமுக சார்பில் பல நட்சத்திரங்கள் களம் இறங்க உள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !